தயவுசெய்து நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் தனித்துவத்தை இழக்காதீர்கள்.’’எனப்பதிவிட்டுள்ளார். அதாவது முருகன் தன்னை காப்பாற்றினார் என குஷ்பு சொன்னதை அவர் விமர்சித்துள்ளார். 

கார் விபத்தில் சிக்கிய நிலையில் கடவுள் முருகன் தன்னை காப்பாற்றி விட்டார் என குஷ்பு பக்தியை வெளிப்படுத்தியதை திமுக எம்.பி. செந்தில் அதனை விமர்சித்துள்ளார்.

கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி குஷ்பு சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், ‘’வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது மேல்மருவத்தூர் அருகே விபத்தை சந்தித்தேன். டேங்கர்ர் லாரி ஒன்றின் மீது மோதியது. கடவுளின் ஆசிர்வாதத்தால், எனக்கு எந்த காயமும் இல்லை. காவல்துறையினர் இதை விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றி விட்டார்’’என பதிவிட்டு இருந்தார். 

இதனை திமுக எம்.பி விமர்சித்துள்ளார். பாதுகாப்பாக பயணியுங்கள். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பகுத்தறிவு சிந்தனையை நான் எப்போதும் போற்றினேன். தயவுசெய்து நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் தனித்துவத்தை இழக்காதீர்கள்.’’எனப்பதிவிட்டுள்ளார். அதாவது முருகன் தன்னை காப்பாற்றினார் என குஷ்பு சொன்னதை அவர் விமர்சித்துள்ளார்.