விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து  விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிகப் பெரிய போராட்டமாக இது உருவெடுத்துள்ள நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறுகையில், போராட்டம் பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாகவும், உரிமைகளைப் பாதுகாக்க இந்தியாவில் நடைபெறும் இந்த அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவுத்துறை, இது குறித்து பேசும்போது, கனடா பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்கள் இந்தியாவில் நடைபெறும் விவகாரம் பற்றி தவறான தகவலை தெரிவிப்பதாகவும், ஜனநாயக நாட்டின் உள்விவகாரத்தில் இவர்களின் கருத்து தேவையற்றது என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.