அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அமித்ஷா  திராவிட கழகமாக மாறி 5 வருடங்கள் ஆகிறது என்றார். சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு நாங்கள் எதிர்க்கட்சிகள் என அண்ணாமலை கூவிக்கொண்டு இருக்கின்றனர்.

திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் அதிமுக, பாஜக மற்றும் அக்கட்சி நிர்வாகிகளையும் ஆபாசமாகவும், தரக்குறைவாக விமர்சித்து பேசியது வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ராமாபுரத்தில் திமுக மாணவரணியின் சார்பாக கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய திமுக பேச்சாளர் சாதிக் கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணியின் காமெடியை சுட்டிக்காட்டி அதிமுக இப்ப யாரு கையில் இருக்கிறது என அக்கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கே தெரியவில்லை என்றார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அமித்ஷா திராவிட கழகமாக மாறி 5 வருடங்கள் ஆகிறது என்றார். சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு நாங்கள் எதிர்க்கட்சிகள் என அண்ணாமலை கூவிக்கொண்டு இருக்கின்றனர்.

பணத்திற்காக ஆசைப்பட்டு கட்சி விட்டுவிட்டதாக தேமுதிகவை விமர்சித்தார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுவுக்கு அடிமையானவர் என்று பேசினார். வீட்டில் விளக்கு ஏற்றுங்கள், மணி அடியுங்கள் என கொரோனா காலத்தில் பாஜகவினர் கலர் கலராக ரீல் விட்டதாகவும், ஆனால், இன்னும் வடமாநிலங்களில் கொரோனா அதிகமாக இருக்கிறது. தடுப்பூசியை இயக்கத்தை திமுக அரசு விரைவுப்படுத்தியதன் எதிரொலியாகவே தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததிருக்கிறது என்றார். 

பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோர் பெயர்களை குறிப்பிட்ட அவர் அவர்களை விலைமாதுக்களோடு ஒப்பிட்டு பேசினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய அவர் திமுகவை அழித்து விடுவேன் என்று கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியுனார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க;- இதற்காக தான் சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டாரா? புது குண்டை தூக்கி போடும் முக்கிய அரசியல் பிரமுகர்..!