கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. பெரும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக பின்னடைவு சந்தித்து வருகின்றது. 

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 10ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 14ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளில் 4-ல் இடதுசாரி கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. எஞ்சிய 2 மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக பின்னடைவு சந்தித்து வருகின்றது. 

அதேபோல், 86 நகராட்சிகளில் 39ல் இடதுசாரிகள், 38ல் காங்கிரஸ் கூட்டணியும், 2 ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், 3ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 90ல்  இடதுசாரிகளும், 57ல் காங்கிரஸ் கூட்டணியும், 3ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 942 ஊராட்சிகளில் 367ல் இடதசாரிகளும், 321ல் காங்கிரசும், 28ல் பாஜகவும் முன்னணியில் உள்ளன.