தாலி அறுப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முகமது ரியாஸ் இப்போது" தாலி கட்டுகிறாரே?" அவரை நீங்கள் ஏன் " சங்கி" என்று திட்டவில்லை? அதற்கு ஏற்பாடு செய்த கேரள முதல்வர் பினராய் விஜயனை ஏன் " சங்கிகளின் சகா" என அழைக்க வில்லை? என செய்தி வாசிப்பாளர் செளதாமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டில், சென்னையில், பா.ஜ.க.வின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர். உங்கள் பாக்ஷையில், " சங்கி " என அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால், எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா எனப் பாருங்கள்.  முதலில் இன்று கேரளாவில், நீங்கள் நடத்தும் " சூடு பிடித்த விவாதம்", காங்கிரஸ் கட்சித் தலைவர் முள்ளம்பள்ளி ராமச்சந்திரனின் கூற்று பற்றியதுதான்.

 அப்படி என்ன முள்ளம்பள்ளி கூறி விட்டார்? சுகாதார அமைச்சர் சைலஜா டீச்சரை, " நிஃபா ராணி. கொரோனா சக்கரவர்த்தினி " என்று கூறி விட்டார். இது எப்படித் தவறு? நிஃபா வைரசை ஒழித்தவர் என்று சைலஜா டீச்சரை நீங்கள் தானே புகழ்ந்தீர்கள்? அதற்காக, அமெரிக்கா வரை சென்று, முதல்வர் பினராயியும், டீச்சரும் "விருது" பெற்றார்களே! நான் என்ன அமெரிக்கத் தொடர்பு மார்க்சிசத்திற்கு ஒத்துவருமா என்ற கஷ்டமான கேள்வியையா கேட்டு விட்டேன்? அது " தனியார் மருத்துவ மாஃபியா (Pvt medical mafiah) " என்றா சொல்லி விட்டேன்? முள்ளம்பள்ளி கூற்று, பெண்களைத் தாக்குவதாகவா இருக்கிறது? உங்கள் வி.எஸ்.அச்சுதானந்தன், காங்கிரஸ் தலைவியை, ஒருமுறை, " அபச்சாரி" என அழைத்ததை விடவா இது மோசம்? உம்மன் சாண்டி மகளது " விவாகரத்தை " காரணம் காட்டி, " அப்பாவுக்கும், மகளுக்கும் கன்மோன்" எனப் பேசியது பினராய் விஜயன் ஆட்களான நீங்கள் தானே? அதெல்லாம்    " பெண்களை இழிவு படுத்தல்" என்ற " ஆணாதிக்க புத்தி"தானே!  அதுவும், உங்களுடைய வரலாறுதானே! 

சரி. சமீபத்தில் உங்கள் தலைவர் பினராய் மகள் வீணாவிற்கும், உங்கள் " அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்க"  தலைவர் முகமது ரியாஸிற்கும் திருமணம் நடந்தது. இதே ரியாஸ் தனது முதல் மனைவி டாக்டர் சஹிமாவுடன் பரஸ்பர  விவாகரத்து செய்தது ஏன்?  சஹிமா, தனது கணவர் ரியாஸ், வெளியே சென்று டாக்டர் தொழில் பார்க்கக் கூடாதென மிரட்டினார் என்றும், வீட்டில் சுவரோடு தன்னை சாய்த்து, கால்முட்டியால் வயிற்றில் தாக்கினார் என்றும் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தாரே? அது " பெண்விரோத செயலாக" இப்போது மாமனாராக ஆகியிருக்கும் சகாவிற்கும், அவரது மகளிற்கும் தெரியவில்லையே!  

சரி. பரவாயில்லை. இருவரும் விரும்பி மணமுடிக்கிறார்கள். அது அவர்களது விருப்பம் என விட்டு விடுவோம். இருவரும், பிள்ளைகள் பெற்ற பின், 2015-ல் விவாகரத்து பெற்ற பின்னர் தானே, காதலித்து,  2020- ல் திருமணம் செய்து கொண்டார்கள்? அப்போது யாரும் " உம்மன் சாண்டி மகளைப் பற்றி பேசினீர்களே" என்று உங்களை கேட்க வில்லையே! 

சரி. போகட்டும். உங்கள் ரியாஸ், உங்கள் வீட்டுப்பெண் வீணாவிற்கு, " தாலி" கட்டி, திருமணம் செய்தார்.  ரியாஸ் தாயார், எங்களது இந்து வழக்கப்படி , தாலிக்கான, " முடிச்சுகளை" போட்டார். இந்து மத நம்பிக்கையுள்ள  எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் மத நம்பிக்கையே இல்லாத நீங்கள் அவர்களை   " சங்கிகள்" என்று தூற்ற வில்லையே! சரி. அதுவும்  " மணமகளின் விருப்பம்" என விட்டு விடலாம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், DYFI நடத்திய   " தாலி அறுப்பு போராட்டத்தில்" எத்தனை சி.பி.எம். இளம் பெண் சகாக்கள் கலந்து கொண்டு, " ஆணாதிக்க புத்தியான, பெண்களை அடிமைப்படுத்தும் தாலி ஒழிக" என்று முத்திரை வாக்கியம் எழுப்பினார்கள்?  அவர்களெல்லாம் இப்போது எங்கே போனார்கள்? அந்த " தாலி அறுப்புப் போராட்டத்திற்கு" தலைமை தாங்கிய முகமது ரியாஸ் இப்போது " தாலி கட்டுகிறாரே?" அவரை நீங்கள் ஏன் " சங்கி" என்று திட்டவில்லை? அதற்கு ஏற்பாடு செய்த கேரள முதல்வர் பினராய் விஜயனை ஏன் " சங்கிகளின் சகா" என அழைக்க வில்லை? ஒரு பெண்ணாக நின்று நான் கேட்கிறேன். 

என்னை உடனே, " பாண்டிக்காரி" என்று தானே வசவு பாடுவீர்கள்? முழக்கம் போடும் போது, " சாதியில்லை, மதம் இல்லை. மொழி இல்லை. இனம் இல்லை. " என்று சத்தம் போட்டு விட்டு, தமிழ்நாட்டுக்காரர்களை " பாண்டிக்காரங்க " என்று தூற்றுவது, எந்த " டிக்‌ஷனரி" வார்த்தை? ஆகவே " கூச்சல்" போடாதீர்கள். உங்கள் " குப்பைப் தொட்டியில்" நிறைய " கொள்கைகள்" உறங்கிக் கொண்டு இருக்கிறது.. நான் இனி, உங்களை சந்திக்க அடிக்கடி வருவேன் என்று செளதாமணி கூறியுள்ளார்.