ஒகி புயலில் சிக்கி கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

ஒகி புயலால் கன்னியாக்குமரி மாவட்டமே தலைகீழாக புரட்டிப்போடபட்டுள்ளது. பலத்த காற்றால் வேரோட சாய்ந்த மரங்களால் பல வீடுகள் சேதமடைந்தன. 

மேலும் ஒகி புயலால் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால் ஒகி புயலில் சிக்கி கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய நிலவரப்படி கேரளாவில் 31 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் இந்த புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

ஒக்கி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்ற முடியாததால் கடலில் மூழ்கி மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.