காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் இருந்து தான் கேரளாவுக்கு தேவையான காய்கறி பால் உள்ளிட்ட பொருள்கள் அனுப்ப பட்டு வருகின்றது. இந்த நிலையில் முல்லை பெரியார் அணை விவகாரம் நேரத்தில் இந்த பொருட்கள் அனைத்து நிறுத்தப்படும். தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லும் காய்கறிகள் பழங்கள் எல்லாம் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்து காய்கறிகளை வாங்க மறுத்து வந்தார்கள். இந்தநிலையில்

 தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.