அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது செல்லாது எனவும் ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் கே.சி.பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை பிடுங்கியதால் அவர் தர்மயுத்ததை தொடங்கினார். 

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் அதிமுக தங்களுக்கே சொந்தம் எனவும் சசிகலாவால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது எனவும் ஒபிஎஸ் கூறிவந்தார். ஆனால் எடப்பாடி ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. 

இதைதொடர்ந்து மோடி வற்புறுத்தலுக்கிணங்க இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து கட்சியை செயல்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவை சேர்ந்த கே.சி பழனிச்சாமி ஆதரிப்போம் என தெரிவித்தார். 

இதனால் அவர் அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.சி.பழனிசாமி, சர்வாதிகார மனப்பான்மை உடன் ஓ.பி.எஸ்., இபிஎஸ் செயல்படுவதாகவும் அதிமுகவில் இரட்டை தலைமையால் பல பிரச்சனைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது செல்லாது எனவும் ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் குற்றம் சாட்டினார். 

எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸீம் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அதிமுக தனிநபர் சொத்து அல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.