திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலுார் மக்களவைத் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்து பட்டியலையும் தாக்கல் செய்தார்.

அதில் கதிர் ஆனந்த் பெயரில் வங்கி இருப்பு 19.30 லட்சம் ரூபாய் …வங்கியில் நிரந்தர வைப்பு தொகை 1.33 கோடி ரூபாய் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.'
டயோட்டோ இனோவா' கார் - மூன்று 'மகேந்திரா' டிராக்டர் - நான்கு உள்ளன. 65.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3664 கிராம் தங்க நகைகள், பங்கு சந்தையில் 9.80 கோடி ரூபாய் உள்ளன.

மொத்தம் அசையும் சொத்துக்கள் மதிப்பு 12.24 கோடி ரூபாய். அசையா சொத்துக்களாக 26.81 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன.
கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா பெயரில் வங்கி கையிருப்பு 8.83 லட்சம் ரூபாய் 'டயோட்டா பார்சுனர்' கார்…. 27.18 லட்சம், ரூபாய் மதிப்புள்ள 1003 கிராம் தங்க நகை என 96 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் உள்ளன.

சென்னையில் 14.12 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் உள்ளன. இவர் பெயரில் 33 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மகள் செந்தாமரை பெயரில் 31.96 லட்சம் ரூபாய் மதிப்பாலான அசையும் சொத்துக்கள் உள்ளன.

கதிர் ஆனந்த் பெயரில் உள்ள பூர்வீக சொத்து மதிப்பு 19.25 கோடி ரூபாய் சங்கீதா பெயரில் 9.54 கோடி ரூபாய்..கதிர் ஆனந்த் அவரது மனைவி சங்கீதா மகள் செந்தாமரை ஆகியோர் பெயர்களில் மொத்த சொத்து மதிப்பு 54.45 கோடி ரூபாய். கடந்த முறை தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட இந்த முறை 2.79 கோடி ரூபாய் குறைந்துள்ளது.