Asianet News TamilAsianet News Tamil

வாய் உதாரு விட்டது எல்லாம் என்ன ஆச்சு? பாமகவை மரண கலாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி!!

திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம்ன்னு சொன்னீங்க இப்போ அதெல்லாம் என்ன ஆச்சு? என  பாமகவை நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கலாய்த்துள்ளார். கஸ்தூரியின் இந்த ட்வீட் வேகமாக வைரலாகி வருகிறது.

Kasthuri Shankar tweet against pmk
Author
Chennai, First Published Feb 18, 2019, 9:02 PM IST

திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம்ன்னு சொன்னீங்க இப்போ அதெல்லாம் என்ன ஆச்சு? என  பாமகவை நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கலாய்த்துள்ளார். கஸ்தூரியின் இந்த ட்வீட் வேகமாக வைரலாகி வருகிறது.
 
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ் - விசிக - மதிமுக- இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல பிஜேபி, அதிமுக -பாமக-தேமுதிக என எதிரணியில் பலம்  பொருந்திய கூட்டணி என இன்னொரு பக்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Kasthuri Shankar tweet against pmk
 
ஆனாலும் பாமக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்றே தெரியவில்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் எந்த கட்சி தங்களுக்கு அதிக சீட்டையும், தாங்கள் கேட்கும் தொகுதியையும் சில டிமாண்டையும் ஏற்றுக்கொண்டால்  அவர்களோடு தான் கூட்டணி என்ற முடிவில்  இருப்பதாக தெரிகிறது. பாமக தரப்பிலிருந்து கூட்டணி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

 
இந்நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி;   PMK  4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக  ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி  புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு?  என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios