Asianet News TamilAsianet News Tamil

யூனியன் பிரதேசமாகும் சென்னை... சீமான் அதிரடி ஆரூடம்..!

காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2-ஆக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

kashmir issue...Naam Tamilar Katchi seeman speech
Author
Tamil Nadu, First Published Aug 19, 2019, 1:25 PM IST

காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2-ஆக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

கடந்த மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். kashmir issue...Naam Tamilar Katchi seeman speech

மேலும், ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என பாராட்டு தெரிவித்திருந்தார். அது போல் கமல், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். kashmir issue...Naam Tamilar Katchi seeman speech

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள். வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து, சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம். ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதே கருத்தை ப.சிதம்பரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios