கரூரில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஸ்டாலின் கலந்து கொண்ட ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் ஸ்டாலினுக்கு மிக அருகாமையில் செந்தில்பாலாஜி அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னால்தான் மா.செ. நன்னியூர் ராஜேந்திரன், சின்னசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

இதில் பெரியசாமியும், நேருமாவது வேற்று மாவட்டத்துக்காரர்கள். ஆனால் கரூர் தி.மு.க.வின் முக்கிய தலைக்கட்டுகளான ராஜேந்திரனும், சின்னசாமியுமே செந்தில்பாலாஜிக்கு பிறகுதான் அமர முடிந்தது அம்மாவட்ட தி.மு.க.வில் பெரிதாய் பரபரப்பை கிளப்பியது. 

நமது ஏஸியா நெட் தமிழ் இணையதளம் இதை தெளிவாக சுட்டிக்காட்டி, ’நினைச்சமாதிரியே செந்தில்பாலாஜி தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டார். பார்த்தீங்களா?’ என்று கரூரின் மற்ற நிர்வாகிகள் ஷாக் ஆவதை எழுதியிருந்தோம். நாம் சுட்டிக்காட்டி ஜஸ்ட் ஒரே நாள்தான் ஆகியிருந்த நிலையில், இதோ இன்று கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியை ஜஸ்ட் லைக் தட் ஆக பிடித்துவிட்டார் செந்தில் பாலாஜி. 

அம்மாவட்ட பொறுப்பாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, செ.பா. அமரவைக்கப்பட்டுள்ளார். ஆக நாம் எதை நோக்கி செ.பா. நகர்வதாக சுட்டிக்காட்டி இருந்தோமோ அது நடந்தேவிட்டது. ஊராட்சி சபை கூட்டத்துக்காக கரூருக்கு ஸ்டாலின் வந்திருந்தபோதுதான் செந்தில்பாலாஜி சார்பாக, அதேவேளையில் நன்னியூரை ஆகாத தி.மு.க.வினர் வெகு அழுத்தம் கொடுத்து ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்களாம். ‘மாவட்ட கழகம் எந்த எழுச்சியுமில்லாம தேய்ஞ்சுகிட்டே இருக்குது. நல்ல ஆக்டீவ் நபரை அதுல உட்கார வைக்கணும் தளபதி.’ என்றார்களாம்.

 

அவர்களின் உட்சூட்சமத்தை ஸ்டாலின் புரிந்து கொண்டு மர்மமாக சிரித்திருக்கிறார். அதன் பிறகும் சில ஜிஜ்ஜாக் அரசியல் சித்து வேலைகளை செந்தில்பாலாஜி செய்திட, இதோ இன்று கழக பொதுச்செயலாளர் அறிவித்துவிட்டார் பெரும் பதவியை. ஆனால் கரூரின் அனைத்துக் கட்சியினரோ ”கட்சியில சேர்ந்தப்பவே செந்தில்பாலாஜி வெச்ச  முக்கிய கோரிக்கையும், வாக்குறுதியும்...’கட்சியில சேர்ந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை மாவட்டமாக்குங்க. மற்றபடி செலவு உள்ளிட்ட வேலைகளை நான் கவனிச்சுக்குறேன்.’ அப்படிங்கிறதுதான். அவரோட கோரிக்கை இதோ நிறைவேறிடுச்சு.” என்கிறார்கள். ஹும்! எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்யா.