தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலரான அன்பழகன் மற்றும் கரூர் கலெக்டர் திமுக மற்றும் காங்கிரஸ் மீது புகார் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர், "அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பாக வழக்கறிஞர் செந்தில் நாதன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்டோர் எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, மிரட்டல் விடும் பாணியில் எனக்கு பதில் அளித்தனர், எனவே எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேராபத்து உள்ளது என கூறி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஒரு மாவட்ட ஆட்சியரே தன் உயிருக்கு ஆபத்து என கூறி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கலங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை பற்றி மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் நேர்மையாக தங்களை பணி செய்ய விட மாட்றாங்க என புலம்புகிறார் மாவட்ட ஆட்சியர்.