karunas pressmeet chennai vadapalani

இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “ஒற்றுமையின் சக்தியாம் அம்மா அவர்கள் வளர்த்த கட்சி பிளவு பட கூடாது. என்றுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என பேசினார்.

அப்போது, இடையில் குறுக்கிட்ட செய்தியாளர்கள், இன்று ஒற்றுமையை பற்றி பேசிய நீங்கள், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தேபோது, அவருக்கு எதிராக ஒற்றுமையை குலைக்கும் வண்ணம், செயல்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

இதை கேட்டு திகைத்து போன கருணாஸ், “ஐயா நான் அப்ப அரசியலுக்கு மிகவும் சிறியவன், அனுபவம் இல்லாதவன். அது அதிமுக உட்கட்சி விவகாரம். அதில நான் தலையிட்டு கருத்து சொல்ல முடியாததால், கூறவில்லை” என்று மழுப்பினார்.

“இப்போதுகூட அம்மா வளர்த்த ஆட்சி நீடிக்க வேண்டும். அதற்காகவே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொல்கிறேன்” என்று ஏதேதோ சொல்லி மழுப்பினார்.

அறிக்கையிலேயே கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சி அணிகள் பிரிய கூடாது என சொன்னவர், கேள்விக்கு பதில் அளிக்கும்போது, மழுப்பலாக கூறியது, உடன் இருந்த தொண்டர்களையே குழம்ப வைத்தது.