சட்டப்பேரவை விதி முக்கிய விதியான, தகுதி இழப்பு சட்ட விதி என் 6-ன் கீழ் நடவடிக்கை எடுத்து கருணாஸ், அறந்தாங்கி ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரது பதவிகளை பறிக்க அதிரடி திட்டமிடப்படுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தொடர்ந்து அளவுக்கு மீறி அதிமுகவை எதிர்த்து வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் தனபாலுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார். இவர்களுடன் சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிமுக சின்னமான இரட்டை இலை நின்று வெற்றி பெற்று விட்டு தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிராக பேசுவதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து உடனடியாக பரிசீலித்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் விடுத்தார். இது மட்டுமின்றி சி.வி.சண்முகம் - தனபால் சந்திப்புக்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர்.

சாதி வெறி பேச்சு, எடப்பாடியை அடித்து விடுவேன், ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு ஊத்துவேன் என வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டு புழல், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டர். பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கோர்ட்டு உத்தரவால் அது முடியாமல் போனது. பின்னர் ஜாமினில் வெளியே வந்த கருணாஸ், தொடர்ந்து தனது நாவடக்கத்தை மேற்கொளிளாமல் எடப்பாடி அரசையும், அதிமுக எம்எல்ஏ.ககளையும் போட்டு தாக்கி வருகிறார். 

இதனால், மிகுந்த கடுப்பாகியுள்ள அதிமுக தலைமை மற்றும் ஆளும் கட்சியினர் இதற்கொரு முடிவு கட்டியே ஆக வேண்டுமென தீர்மானித்துள்ளனர். கருணாஸ்க்கு பின்புலத்தில்  தினகரன் இருப்பதால், இவருடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளனர். அதனடிப்படையிலேயே சிவிசண்முகம், சட்டப்பேரவை தலைவர் தனபாலை சந்தித்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து, கருணாஸ் மட்டுமின்றி அதிமுகவிற்கு எதிராக செயல்படும் அறந்தாங்கி ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரது பதவிகளையும் பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.