அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற செய்வதே எங்கள் நோக்கம் என எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார். 

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் வீடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இரவு பகலாக களப்பணி செய்வோம் என கருணாஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரத்தன்போது, தெருமுனை நாடகங்கள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம் என்று கருணாஸின் புலிப்படை தெரிவித்துள்ளது.

மேற்கண்ட மூன்று தொகுதிகளின் வெற்றியையும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்றும், இதற்காக எங்கள் புலிப்படை வீர மறவர் படை செயல்படும் என்கிறார் கருணாஸ்.