karunas abusing admk chiefs

இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், ''அம்மா உருவாக்கிய கட்சி, ஒன்றாக இணைய வேண்டும். அம்மா ஆட்சி தொடர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிமுகவின் அணிகளை பாஜக இயக்குவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதை கேட்டு ''ஜர்க்கான'' கருணாஸ், ''ஊசி இடம் கொடுத்தால் தனே நூல் நுழையும். உன் வீட்டு அடுப்படியை நீ ஒழுங்காய் பராமரித்தால, அடுப்பில் பூனை ஏன் உறங்க போகிறது.

அதிமுக தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால், கட்சியை வலுவாக வைத்து இருந்தால், இந்த பிரச்சனை ஏன் வரப்போகிறது'' என அதிமுக தலைவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் பதிலடி கொடுத்தார்.

அதிமுக தலைவர்களுக்கே புத்தி சொல்லும் கருணாசின் துணிவை கண்டு செய்தியாளர்கள் திகைத்து போயினர்.