திமுக தலைவர் கருணாநிதி, ஜனாதிபதிதேர்தல்க்கான வாக்குப்பதிவுக்காக நாளை, சட்டமன்றத்துக்கு வருகிறார் என திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த நவம்பர் மாதம் சென்னை கவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்பேரில் அவருக்கு சிகிச்சை அளித்ததில், தற்போது குணமடைந்துள்ளார். ஆனால், தொண்டர்கள் அவரை சந்திக்க கூடாது. நோற்று பரவ வாய்ப்புள்ளது என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர், தொண்டர்களை சந்திக்க மறுத்துவருகிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும், எம்பிக்களும் வாக்களிக்க வேண்டும். இதையொட்டி நாளை, சென்னை தலைமை செயலகத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க உள்ளதாக தெரிகிறது.

 அரசியல் நிகழ்ச்சிக்காக 11 மாதங்களுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் இருந்து வெளியே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீண்டும் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருணாநிதி வாக்களிக்க வாய்ப்புகள் இருந்தாலும், டாக்டரின் அறிவுரைப்படி அவர் வாக்க்க வருவது குறித்து நாளை காலையில் முடிவு செய்யப்படும் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்