திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பெண் என்பதால் எவ்வளவு மரியாதையோடு திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி பேசியுள்ளார் என பழைய நிகழ்வு ஒன்றை ஹெச்.ராஜா எடுத்துரைத்துள்ளார். 

இதுகுறித்து அவர், ’’திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பெண் என்பதால் எவ்வளவு மரியாதையோடு திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி பேசியுள்ளார். இந்த மாதிரி கரு.நாகராஜன் அவர்களுக்கு பேசத் தெரியவில்லையே’’எனத் தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, ’தமிழக அரசியல்வாதிகளை பற்றி பெருமையாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று வருத்தப்படும் வாலிபர் வயோதிகர்களுக்கு இது மதுரையில் பொதுகூட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் இந்திரா காந்தி அம்மையாருக்கு தலையில் ரத்தம் ஒழுகியதை பற்றி திமுக தலைவர் கருணாநிதி, ’அம்மையாருக்கு மாதவிலக்கை இருந்திருக்கும்’என்று சொல்லி தமிழனின் திராவிட பெருமையை தரணிக்கு காட்டினார்’’என வார இதழில் வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார்

 

அடுத்த பதிவில், ’’கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால், இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில்  மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் பழிக்கு பழியாக நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும். என்ன திருமாவளவன் அவர்களே உங்களை போல பாஜககாரர்கள் நாகரீகமாக பேசலை என்கிறீர்களா? நடிகை காயத்ரி ரகுராம் பற்றி அவிழ்த்து போட்டு நடிக்கும் தற்குறிகளுக்கு என்ன தெரியும்? எனப்பேசியவர்தானே நீங்கள்’’என கேள்வி எழுப்பியுள்ளார்.