மூச்சுத் திணறல் உடனடி யாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் மருத்துவ மனை முன்பு திரண்டனர்.
மூச்சுத் திணறல் உடனடி யாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் மருத்துவ மனை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அடுத்த 2 நாட்களில் கருணா நிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல் நிலை சீராகி வருவதாக தெரிவித்த னர். குடியரசுத் தலைவர் ராம் நாத்கோவிந்த், குடியரசு துணைத்தலை வர் வெங்கையா நாயுடு, மத்தியஅமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக் கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக கருணாநிதி சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வரு கிறார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்- இறங்குமுகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த வாரம் கருணா நிதிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது. 2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை அதிகரித்தது. லண்ட னைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தாமதமாகப் பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு ஞாயிறன்று மஞ்சள்காமாலை ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை அறிவிப்பு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நேற்று மாலையில் வெளியான காவேரி மருத்துவ மனையின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
வயது முதிர்வு காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அமைய வில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அடுத்த 24 மணிநேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது திமுக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு விடிய விடிய கூடி தலைவா எழுந்து வா… என முழுக்கமிட்டு வருகின்றனர். கருணாநிதிக்காக உருக்கமுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது அதிகாலை முதலே வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்காண தொண்டர்கள் மீண்டும் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் டாக்டர்கள் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
