தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வரதராஜனை உட்கார வைத்தார். அதற்கு பிறகு 8 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு அரிஜன் கூட மத்திய பிரதேசத்தில் நீதிபதி ஆகவில்லை. இன்றை வரை கிடையாது. ஆனால், கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வரதராஜனை உட்கார வைத்தார். அதற்கு பிறகு 8 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை. பிரசாந்த் கிஷோர் கெஜ்ரிவாலுக்கும், மோடிக்கும் வேலை செய்திருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் போடா மாட்டார்கள். பிரஷாந்த் கிஷோர் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதால் வயிற்றெரிசலில் அதைபற்றி மட்டும் தான் செய்தி போடுகிறார்கள். 

டி.வி.காரர்கள் மாதிரி உலகத்திலேயே அயோக்கியன் எவனும் கிடையாது. பம்பாயில் இருக்கிற ரெட்லைட் ஏரியாவை போல டி.வி. சேனல்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஸ்டாலின் வீட்டில் கோயிலுக்கு போனால் அது ஒரு விவாதமாம். இதெல்லாமா நாட்டுக்கு முக்கியம்? என அவர் பேசியுள்ளார். இது திமுகவுடன் கூட்டணியில் உள்ள விசிகவினரை சங்கடப்பட வைத்துள்ளது.