Asianet News TamilAsianet News Tamil

திமுக தொண்டர்களைப் பார்த்து கையசைத்த கருணாநிதி...! ஆர்ப்பரித்த தொண்டர்கள்

Karunanidhi met DMK volunteers
Karunanidhi met DMK volunteers
Author
First Published Jun 3, 2018, 12:14 PM IST


தனது 95-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, தனது கோபாலபுர இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். 

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

Karunanidhi met DMK volunteers

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தன்னுடைய 95-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்..

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடிகள், தோரணங்களால் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கோலாகலாக கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

Karunanidhi met DMK volunteersஇந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி, தங்களை நிச்சயம் சந்திப்பார் என்ற நம்பிக்கையின்பேரில், திமுக தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்துள்ளனர். அப்போது, தொண்டர்களைப் பார்க்க கருணாநிதி வாசலுக்கு வந்தார். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர். 

கருணாநிதியைப் பார்த்த தொண்டர்கள் வெகுவாக ஆர்ப்பரித்தனர். அப்போது, கருணாநிதி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் - நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios