மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சாதாரண சிகிச்சைக்காகத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலத்துடன் உள்ளார். என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தலைவர் கலைஞர் அவர்கள் உடல் ஒவ்வாமை காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தொடர்ந்து மேலும் சில பரிசோதனைகளும், அதன் தொடர்பான சிகிச்சைகளும் பெற வேண்டி இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருப்பதால் தலைவரை காண தோழர்களும் , நண்பர்களு, பார்வையாளர்களும் நேரில் வராமல் அருள் கூர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிரோம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
