செல்வியிடம் மட்டுமே பேசும் கருணாநிதி, தற்போது எந்தவித அசைவோ, சைகை காட்டினால் கண்டுகொள்ளாமல் ,  அமைதியாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ’செக்கப்’ செய்வதற்காகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிராக்கோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் ஒரே நாளில் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று இரவிலிருந்து கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், “கலைஞர் சீரியசாக இருக்கிறார். இதயம் மட்டும்தான் துடிக்கிறதாம்.  இதனை முதல்வர் எடப்பாடியிடம் தெரிவித்துள்ள துரைமுருகனும், ஏ.வ.வேலுவும், " ஏதேனும் ஆச்சுன்னா, அண்ணா சமாதியில் இடம் வேண்டும்" என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி மறுப்பேதும் சொல்லவில்லை. லங் கேன்சர் வந்துள்ளது. ஆகவே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை. இன்னும் சில நாட்களுக்குள் எதுவும் நடக்கலாம். அனைவரின் வெளியூர் பயணமும் ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்புமாறு திமுகவிலிருந்து தகவல் வெளியானதாக வலைத்தளங்களில் வைரலானது.

அப்போது சிகிச்சைக்கு பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்றும்  அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும்; அவர் நலமுடன் இருக்கிறார்  எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் உண்மை நிலையோ, காவேரி மருத்துவமனைக்குச் சென்று திமுக தலைவர் கருணாநிதி. கடந்த 15 நாட்களாகவே சோர்வாகவே காணப்படுகிறாராம். படுக்கையிலிருந்து தூக்கி உட்கார வைத்தாலும், உட்காராமல் படுத்துக் கொள்கிறாராம். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும், சில தகவல்களைச் சொல்லியே அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். மருத்துவமனைக்குப் போய்விட்டு வந்த பிறகு,

உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்விலிருக்கும், அப்பா மீது அளவற்ற பாசம் கொண்ட கருணாநிதியின் மகள்  செல்வி தான், உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வில் தங்கிய சமயத்திலிருந்து கவனித்து வருகிறார். செல்விதான் எப்போதும் கலைஞருடன் சைகை காட்டி உரையாடுவாராம், ஆனால் தற்போது உள்ள நிலையில் செல்வியின் ஆக்ஷனுக்கு எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறாராம்.

குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் வந்து கூப்பிட்டாலுமே ரெஸ்பான்ஸ் செய்யாமல் சைலன்ட்டாகவே  இருக்கிறாராம் கருணாநிதி. கருணாநிதிக்கு நினைவில் இருப்பதும், சைகையில் உரையாடுவதும் செல்வியுடன் மட்டுமே, ஆனால் செல்வி பேசினாலும் எவ்வித ரியாக்ஷனும் கொடுக்காமல் இருப்பதால் கருணாநிதி குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.  இதுகுறித்து கோபாலபுரம் வட்டாரத்தில் விசாரிக்கையில், கலைஞர் ஆபத்தான கட்டத்தில் இல்லை, ஆனால் நார்மலாகவும் இல்லை என ட்விஸ்ட் வச்சு சொல்கிறார்கள்.