ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்.

சுமார் 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை உள்துறை அமைச்சராகவும் மூன்று முறை நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர் காரைக்குடியை சேர்ந்த ப சிதம்பரம் ஆவார் 

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ப சிதம்பரம் மிகப்பெரும் செல்வந்தர்களில்  ஒருவராவார் எம்ஏஎம் ராமசாமி மற்றும் ஏசி முத்தையா ஆகியோர் இவருக்கு மாமன் முறை. அவர் பிரபல எழுத்தாளரும் முன்னாள் நீதிபதியுமான சௌந்தர கைலாசத்தின் மகளான நளினியை  திருமணம் செய்திருந்தார்.

தனது மகனான கார்த்திக்கு பிரபல பரதநாட்டிய கலைஞரும் மருத்துவருமான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீநிதி  திருமணம் செய்து வைத்தார் குடும்பம் அரசியல் வக்கீல் தொழில் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ப சிதம்பரத்தின் வாழ்க்கையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஐஎன்எஸ் மீடியா வழக்கு மற்றும் சாரதா சிட்பண்ட் முறைகேடு என பல வழக்குகள் சுற்றிச் சுழற்றி அடிக்க ஆரம்பித்தன 

இதில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஏற்கனவே பிடி இறுகி ஜெயிலுக்கு சென்று வந்துவிட்டார் இந்த நிலையில்தான் ப சிதம்பரத்தின் மீதான பிடி இறுக ஆரம்பித்தது.

நேற்று முதலே பரபரப்பாக காணப்பட்ட இந்த விவகாரம் இன்று சுமார் ஒன்பதரை மணி அளவில் முடிவுக்கு வந்தது. கட்சி அலுவலகத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிதம்பரத்தை  சிபிஐ அதிகாரிகள்  சுவர் ஏறி குதித்து சென்று அலேக்காக தூக்கி காரில்அழைத்துச் சென்றனர்.

மிகவும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்ட சிதம்பரம் சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் செல்லும் போது உடைந்து போய் விட்டாராம் நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவரான தனது தந்தையை காவல்துறை மற்றும் சிபிஐ வேனில் அழைத்துச் செல்லும்போது பார்த்த அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உடைந்து அழுதே விட்டாராம்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் நின்று வெற்றி பெற்றவராவார் சிதம்பரத்தின் மனைவி மற்றும் மருமகள் ஆகியோரும் டெல்லியில்தான் தங்கியிருந்தார்கள்.

அவர்களும் சிதம்பரத்தின் மீதான நடவடிக்கை குறித்து கேள்விப்பட்டவுடன் உடைந்து கதறி அழுது விட்டார்களாம் என்னதான் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் கார்த்திக்குக்கு நல்ல தந்தையாகவும் மனைவி நளினிக்கு நல்ல கணவராகவும் இருந்து வருகிறார் தானே.