எப்போதோ கருணாநிதியை கலாய்த்து பதிவிட்ட விணை இப்போது கார்த்தி சிதம்பரத்தை சுழன்றடிக்கிறது. 

சிவகங்கை மக்களவை தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டட் பக்கத்தில் போட்ட பழைய, பதிவு ஒன்று, இ[ப்போது வாட்ஸ் அப்பில் பரவி வருதவதல் பதற்றத்தில் இருக்கிறார் கார்த்தி சிதம்பரம். அந்தப்பதிவு அவருக்கு விழும், திமுக ஓட்டுகளை கேள்விக்குறியாக்கி வருகிறது. 

2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலில், திமுக, அதிமுக, பாஜக வை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், தனித்து போட்டியிட்டு, டெபாசிட் இழந்தார் கார்த்தி சிதம்பரம். தேர்தலுக்கு முன்னும், பின்னும், திராவிட கட்சிகளை, அதிகம் விமர்சித்து பேசியும், சமூக ஊடகங்களில் எழுதியும் வந்தார். அப்போது கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒன்று, தற்போது வாட்ஸ் ஆப்பில், பரவி வருகிறது. அதில், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகியோர் படங்களை போட்டு, 'என் தேசத்தில் படித்தால் வேலை தான் கிடைக்காது.

ஆனால், நடித்தால் நாடே கிடைக்கும்' என்று, மீம்ஸ் போட்டிருந்தார். இந்தப்பதிவு அப்போது வைரலாக பரவியது.  கூட்டணி இல்லாத நிலையில், திராவிட கட்சிகளை, கார்த்தி தாக்கி பேசியதை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. 

கார்த்தியின், 'ட்விட்டர்' பக்கத்திற்கு சென்று, அந்த பழைய மீம்ஸை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து பரப்பி வருகின்றனர். இதை பார்க்கும், திமுக,வினர், என்ன தான் இருந்தாலும், கருணாநிதியின் படத்தை, அந்த, 'மீம்ஸில்' போட்டிருக்கக் கூடாது என்று ஆதங்கப்படுகின்றனர். 'தேர்தலுக்கு வேண்டுமானால் கார்த்தி, திமுகவினரை புகழ்ந்து தள்ளலாம். ஆனால், அவரிடம் எப்போதுமே, திமுகவினருக்கான மரியாதையை எதிர்பார்க்க முடியாது' என்கின்றனர் உடன்பிறப்புகள்.