கர்நாடக மாநிலத்தின் முன்னாள் நீர்பானத்துறை அமைச்சராக இருந்தவர் டி.கே.சிவகுமார். அம்மாநிலத்தின் மிகப் பெரிய தொழிலதிபராகவும் அவர் அறியப்படுகிறார், கர்நாடகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருக்கு பல் வேறு தொழில்கள் உள்ளன.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான பிரமுகராக விளங்கி வரும் டி.கே.சிவகுமார், கிங் மேக்கராகவும் உள்ளார்.  குமாரசாமி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில்  டி.கே.சிவகுமார் மற்றும் ஒரு சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் பண மோசடி வழக்கு பதிவு செய்தது.

மேலும் கடந்த ஆண்டு சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதையடுத்து பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை  முன்பு கடந்த வாரம் சிவகுமார் ஆஜரானார். தொடர்ந்து 5 நாட்களாக அவரிடம் விசாரனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் இன்று கைது செய்தனர். இதையடுத்து நாளை அவர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்படுகிறார்.