கர்நாடகத்தில் பாரதிய ஜனதா அதிருப்தி எம்எல்ஏக்கள் ரகசியமாக கூடி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதால்  எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது .  அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவி கிடைக்காத அதிருப்தியில்  எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன . அதில் பத்துக்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் பெங்களூருவில் உள்ள மாநில அமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரின் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.  பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அரசியல் காய் நகர்த்தல்களுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றினார் எடியூரப்பா , 

சில நேரங்களில் கட்சியின் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படாதவர் என்ற பெயரும் எடியூரப்பாவுக்கு உள்ளது ,  இந்நிலையில் அவருக்கு சொந்த கட்சி எம்எல்ஏக்களாலேயே சோதனை ஏற்பட்டுள்ளது .  அதாவது முதல்வர் எடியூரப்பாவுக்கு  ஆளுநர் பதவி வழங்கி தீவிர அரசியலில் இருந்து ஒரங்கட்டி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கடிதமொன்று பரவி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  அதேநேரத்தில் அவரது கட்சி எம்எல்ஏக்கள்  எடியூரப்பாவுக்கு எதிராக ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பது  எடியூரப்பா அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .  இதுகுறித்து அங்குள்ளவர்கள் கூறுவதாவது :- அந்தக் கடிதத்தை பார்த்ததாகவும் அது முற்றிலும் போலியான கடிதம் எனவும் கூறியுள்ளனர்,

 

எடியூரப்பா  நம்முடைய லிங்காயத்து சமூகத்தையே வெளியே விடாதவர் அவர் வீரகேசரி சமாஜத்தின் தலைவர் மட்டுமல்ல கர்நாடகத்தின் முதலமைச்சர் எனவும் தெரிவித்தார் , அது மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் தலைவர் அவர் என அவர் தெரிவித்தார்.  கர்நாடக பாஜகவின் முதல்வர் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திராவுக்கு எடியூரப்பா முக்கியத்துவம் அளிப்பதற்கு  எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.  பாஜகவின் தேசியத் தலைமையிடம்    எடியூரப்பாவும் எதிர் தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்துவருவதாக தெரிகிறது .  கர்நாடகாவில் காங்கிரஸ் , ஜெடிஎஸ் எம்எல்ஏக்களை இழுத்து குமாரசாமி ஆட்சியை கவிழ்த்த எடியூரப்பா, தற்போது அதே நிலைக்கு ஆளாகியுள்ளார்.