karnataka chief minister siddarmaiah speech about kannada

கர்நாடகாவில் வசிப்பவர்கள் கன்னடர்களே என அம்மாநில முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடக மாநிலத்தின் 62-வது ஆண்டு விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் வசிப்பவர்கள் கண்டிப்பாக கன்னட மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடர்கள்தான். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. அதேநேரத்தில் கர்நாடகாவில் வசிப்பவர்கள் கண்டிப்பாக கன்னட மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கும் கன்னட மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். கர்நாடகாவில் வசித்துக்கொண்டு கன்னட மொழி கற்றுக்கொள்ளாமல் இருப்பது மொழியை அவமதிப்பது போன்றதாகும். எனவே அனைத்து பள்ளிகளிலும் கன்னட மொழியை கற்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார்.