Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகா இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி….… குமாரசாமி மனைவி அனிதா குமாரசாமி அபார வெற்றி !!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் –மதச்சார்பற்ற ஜட்டணி அவார வெற்றி பெற்றுள்ளது. ராம்நர் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாதி அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும் 2 சட்டடமன்ற தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

 

karnataka by election con victory
Author
Bangalore, First Published Nov 6, 2018, 2:28 PM IST

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான எடியூரப்பா, பல்லாரி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஸ்ரீராமுலு, மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான புட்டராஜு ஆகியோர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 

கடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா தொகுதி எம்.எல்.ஏ.வாக நீடிக்கப் போவதாக அறிவித்தார். இதனால், அவர் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ராமநகரா சட்டசபை உறுப்பினருக்கான இருக்கை காலியாக இருந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா இறந்ததால் ஜம்கன்டி சட்டசபை உறுப்பினருக்கான இருக்கையும் காலியானது.

karnataka by election con victory

பாராளுமன்ற இடைத்தேர்தலுடன் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர்  3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தன.

கடந்த மூன்றாம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில் ராமநகரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட  முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 137  வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார். 

இதேபோல், ஜமகன்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

karnataka by election con victory

காங்கிரஸ் கட்சியின் உக்ரப்பா, பெல்லாரி தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.  மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் சிவராமகவுடா 2 லட்சத்து 33 ஆயிரத்து 517 வாக்குகள் வித்தியாசத்தில் மாண்டியா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.  பாரதீய ஜனதாவின் ராகவேந்திரா, ஷிமோகா தொகுதியில் 47,388 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதையடுத்து  பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து வாக்குகள்ள் எண்ணப்பட்டு வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios