கர்நாடக மாநிலத்தில் தமிழ்பாடல் இசைத்த தமிழர்களை ரட்சன வேதிகா என்ற கன்னட அமைப்பினர் சரமாரியாக தாக்கி இசைக்கருவிகளை அடித்து  நொறுக்கி அட்டூழியம் செய்துள்ளனர்.இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில்  தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதி ஒன்றில் நேற்று முன்தினம் ஆடிமாத கோவில் திருவிழா நடைபெற்றது, இதனால் அங்கு பாட்டுக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாரின் வேதாளம் படத்தில் இருந்து ஆலுமா டோலுமா.... என்ற பாடல் பாடப்பட்டது. அதைக்கண்டு எரிச்சலடைந்த  கன்னட ரட்சன வேதிக அமைப்பினர்,அங்கு வந்து பாடலை நிறுத்தும்படி கூறினர், ஆனால் பாடல் நிறுத்தப்படவில்லை என்பதால் சுமார்  20க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து தமிழ் ஒழிக கன்னடம் வாழ்க என்று முழக்கமிட்டனர். அத்துடன் பாட்டுப்பாடிகொண்டிருந்தவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த ஒலிப்பெருக்கி, மற்றும் ட்ரம்ஸ்செட்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளை அடித்து துவம்சம் செய்தனர்.அங்கிருந்த தமிழர்களையும் சரமாரியாக தாக்கினர், அதில் தமிழர்கள் பலர் காயமடைந்தனர், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்த கும்பலின் அட்டூழியத்தை  அவர்கள் கண்டுகொள்ளவில்லை . 

அதை செல்போனில் படம்பிடித்த தமிழ் இளைஞர்களையும் அந்த கும்பல் அடித்து விரட்டியது. காவல்துறை இருக்கும்போதே அட்டூழியத்தை நடத்திய கன்னட ரடசன வேதிக அமைப்பினர், இனி தமிழ் கச்சேரிகளை இங்கு நடத்தக்கூடாது என்றும் எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். இந்நிலையில் தமிழ் மக்களை தாக்கி அடித்து உதைத்த தகவலை அவர்கள் தங்களது முகநூல் பக்கங்களில் பெருமையாக பேசி பரப்பி வருகின்றனர். தமிழ் மக்களும் கன்னட மக்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வந்தாலும், இது போன்ற கன்னட வெறி பிடித்த கும்பல்கள் தொடர்ந்து இங்கு தமிழர்கள் மீது தாக்கதல் நடத்துவது,

தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது என ஒற்றுமையை சீர் குலைக்கும் சதிகளில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள கன்னட மக்கள் கவலை தெவிப்பதுடன், இந்த இனவெறி கும்பலின் செயலையும் கண்டித்துள்ளனர். இது போன்ற சமூக விரோத கும்பல்களின் கொட்டத்தை கர்நாடக போலீஸ் அடக்க வேண்டும் இல்லை என்றால் பெரும் மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிப்பதுடன் ,அவ்ரகளை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.