Asianet News TamilAsianet News Tamil

#KapilSibal : சமாஜ்வாதி கட்சிக்கு தாவிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.! அதிர்ச்சியில் காங்கிரஸ் வட்டாரம்!

Kapil Sibal : 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது. உ.பியில் 2 சீட்தான் கிடைத்தது. உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 

Kapil Sibal Says He Quit Congress Is Samajwadi Rajya Sabha Candidate
Author
First Published May 25, 2022, 12:58 PM IST

தொடர் தோல்வியில் காங்கிரஸ் :

இந்த தோல்வி தொடர்பாக தாங்கள் பதவி விலகத் தயார் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூறி விட்டனர். ஆனால் அதை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்கவில்லை. இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் காங்கிரஸ் தலைமையைத் தாக்கி கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் கபில் சிபல் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அவரது கருத்துக்களுக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Kapil Sibal Says He Quit Congress Is Samajwadi Rajya Sabha Candidate

காங்கிரஸ் தோல்வி குறித்தும் , தலைமை மாற்றம் குறித்தும் கபில் சிபல் சரமாரியாக கேள்விகளை கேட்டிருந்தார்.’இந்த தேர்தல் முடிவு எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. 2014ம் ஆண்டிலிருந்தே கட்சி வீழ்ச்சியைத்தான் கண்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக இழந்து வருகிறோம். நாம் வெற்றி பெற்ற மாநிலத்தைக் கூட நம்மால் தக்க வைக்க முடியவில்லை. இடையில் பல்வேறு கட்சிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்கள், வேட்பாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மாறிப் போய் விட்டனர். 2014ம் ஆண்டு முதல் இதுவரை 177 எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், 222 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியிலும் இப்படி நடந்ததில்லை.

ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர் தலைவர் போலத்தான் செயல்பட்டு வருகிறார். முக்கிய முடிவுகளை அவர்தான் எடுத்து வருகிறார். கட்சியின் சில பிரிவினர் விரும்புவது போல அவரை அதிகாரப்பூர்வமாக தலைவராக்கினாலும் கூட அது எந்த வகையிலும் மாற்றத்தைக் கொடுக்காது.

கபில் சிபல் ராஜினாமா :

ஒரு வீட்டுக்காக காங்கிரஸ் கட்சி இருக்கக் கூடாது. மக்களுக்காக, நாட்டுக்காக, தொண்டர்களுக்காக, வளர்ச்சிக்கான காங்கிரஸாக இது இருக்க வேண்டும். இதைத்தான் நான் எப்போதும் விரும்புகிறேன். பாஜகவை விரும்பாத அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த காங்கிரஸ் இருக்க வேண்டும். அனைவரது கருத்துக்களையும் மதிக்க வேண்டும். அனைவரது திட்டங்களையும் உள்ளடக்க முன்வர வேண்டும். உண்மையான மாற்றம் இருக்க வேண்டும். எதேச்சதிகாரமாக எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது’ என்று கூறினார்.

இந்நிலையில், அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : TASMAC : குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.! டாஸ்மாக் இன்று விடுமுறை.. வெளியான அதிர்ச்சி தகவல்

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

Follow Us:
Download App:
  • android
  • ios