எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..!  யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..! 

ஒரு சிறிய கையடக்க போனிலேயே இந்த உலகம் அடங்கி விட்டது என கூறலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது. எதைவேண்டுமானாலும் அடுத்த நொடியே நம்மால் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

அவ்வளவு ஏன்?  நம்மை அழகழகாக நாம் வைத்திருக்கும் மொபைல் போனிலேயே படம் பிடிக்க முடியும். எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ..  அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் இப்படியா? என்றால் கிடையாது.. அன்றைய காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுப்பது என்பது ஒரு அரிதான செயலாக பார்க்கப்பட்டது. மிகவும் சந்தோஷமான விஷயமாக கருதப்பட்டது. மிகவும் பொக்கிஷமாக காக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோ இன்று அனைவரின் கவனத்தை ஈர்க்க தான் செய்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

இந்த புகைப்படம் உங்களுக்காக....

அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் எடுத்துக் கொண்ட ஓர் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கனிமொழி சிறு பெண்ணாக இருக்கும்போது எம்ஜிஆர் அவர்கள் அவரை ஆசையாக தூக்கி வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.