kanimozhi will become dmk partys key post after stalin

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.

நாடு முழுதும் பரபரப்பாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கில், இதுவரை குற்றம் சாட்டப் பட்டு, பல கட்ட விசாரணைகள் நடத்தப் பட்ட நிலையில், சிபிஐ., தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான போதுமான ஆதாரங்களை வைக்க முடியவில்லை என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு எதிராக வலுவான வகையில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறினார் நீதிபதி ஓ.பி.ஷைனி.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, கலைஞர் தொலைக்காட்சி பண பரிவர்த்தனை வழக்கிலும் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். எனவே, இதுவரை தலைவலியாக இருந்து வந்த இந்த வழக்கில் கனிமொழி விடுவிக்கப் பட்டதை அடுத்து, உற்சாக மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் கன்மொழி. 

இந்நிலையில் திமுக- வில் பொருளாளர் பதவி கனிமொழிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னர் பொருளாளர் பதவியில் இருந்த மு.க.ஸ்டாலின், தற்போது திமுக.,வின் செயல் தலைவர் ஆகியுள்ள நிலையில், கனிமொழிக்கு பொருளாளர் பதவி வழங்கப் படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.