Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை கிண்டலடித்த கனிமொழி... இப்படியொரு எகத்தாளப் பதிலா..?

மண்ணின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொண்டு, மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக் கூடியவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும், வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.
 

Kanimozhi who teased Rajini ... such a harmonious answer
Author
Tamil nadu, First Published Nov 4, 2020, 12:54 PM IST

மண்ணின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொண்டு, மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக் கூடியவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும், வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.

Kanimozhi who teased Rajini ... such a harmonious answer

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூரில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் கிராமசபை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ’’நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வருவது பற்றியும், ஆரம்பிக்க உள்ளது பற்றியும் (நடிகர் ரஜினிகாந்த்) கேள்வி எழுப்பியபோது, ’’ரஜினி எங்கங்க கட்சி ஆரம்பிக்கிறார்? இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் தங்களை எந்த கட்சியிலும் இணைத்துக் கொள்ளலாம். அது நடிகர்களாக இருந்தாலும் அல்லது வேறு துறையை சேர்ந்தவர்களாக இருக்கட்டும். அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம், யாருக்கும் மாற்று கருத்து கிடையாது., அதை தடுக்கும் எண்ணமும் கிடையாது.Kanimozhi who teased Rajini ... such a harmonious answer

ஆனால், இந்த மண்ணின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொண்டு, மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள் தான் ஆட்சி பொறுப்புக்கு வரமுடியும், வரவேண்டும். அதை மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ் மக்களின் சுயமரியாதையை பாதுகாக்க கூடியவர்கள். அடுத்த தலைமுறைக்கான உரிமைக்காக பாடுபடக்கூடியவர்கள் தான் இங்கு ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்று மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது. அது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இனியும் காலதாமதம் செய்யமால் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுதான் திமுகவின் நிலைப்பாடு’’ என அவர் தெரிவித்தார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios