மீட்டிங் கேன்செல் ..! தூத்துக்குடிக்கு டிக்கெட் போடு..! களத்தில் இறங்கிய கனிமொழி..! 

தூத்துக்குடி தொகுதி மக்களுக்காக தனது தலைமையில் இன்று நடக்கவிருந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி விரைந்து உள்ளார் கனிமொழி

இன்று டெல்லியில் முக்கிய கூட்டம் ஒன்றிற்கு தலைமை ஏற்கவிருந்த கனிமொழி, கனமழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள தன் தொகுதி மக்களை காண தூத்துக்குடி விரைந்து மக்களை நேரத்தில் சந்தித்து, விவரத்தை கேட்டு அறிந்தார். 

தொடரும் கனமழை, தென் தமிழகத்துக்கு ரெட் அலெர்ட், குடியிருப்பு பகுதி, பழைய SBI காலனி, SKSR காலனி, லூர்தம்மாள்புரம், முத்துகிருஷ்ணா நகர் மற்றும் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.
 
பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வதாகவும் போர்க்கால அடிப்படையில் விரைந்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளார்.

தூத்துக்குடி எம்.பி யாக தேர்வான கனிமொழி, அவ்வப்போது தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.