மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு நாராயணசாமி அவர்களின் தாயார் ஈஸ்வரி அம்மாள் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். இந்த செய்தி அறிந்து, துயரம் அடைந்த திமுக எம்.பி கனிமொழி முதல் ஆளாய் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

தாயாரை இழந்து வேதனையிலிருக்கும் புதுவை முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். உடன் திமுக மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இருந்தனர்.