Asianet News TamilAsianet News Tamil

அந்தச் சட்டத்தை அனுமதித்தால் தலை நிமிர முடியாது... எதிர்கால சந்ததியினர் அடிமையாகிவிடுவார்கள்... கனிமொழி எம்.பி. வார்னிங்!

இந்தப் புதிய கல்விக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் நாம் அனுமதிக்கவே கூடாது. மத்தியில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் இருப்பதால், அக்கட்சி எந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறதோ அந்தத் திட்டம் அனைத்தையும் மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. பாஜக முதலாளித்துவத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.
 

Kanimozhi warns about new education policy
Author
Chennai, First Published Nov 30, 2019, 10:17 PM IST

புதிய தேசிய கல்விக் கொள்கையை மட்டும் அமல்படுத்த  நாம் அனுமதித்துவிட்டால், எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் நடமாடவே முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.Kanimozhi warns about new education policy
புதிய கல்விக் கொள்கை சட்ட வரைவை திரும்பப் பெறக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் கல்வி பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்று பேசுகையில், “இந்தப் புதிய கல்விக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் நாம் அனுமதிக்கவே கூடாது. மத்தியில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் இருப்பதால், அக்கட்சி எந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறதோ அந்தத் திட்டம் அனைத்தையும் மக்களுக்கு எதிராகக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. பாஜக முதலாளித்துவத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.

Kanimozhi warns about new education policy
புதிய தேசிய கல்விக் கொள்கையை மட்டும் அமல்படுத்த  நாம் அனுமதித்துவிட்டால், எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் நடமாடவே முடியாது. நாமும் நம்முடைய வாரிசுகளும் அடிமைகளாக வாழக்கூடிய சூழ்நிலைக்கு இந்த மண்ணில் தள்ளப்படுவோம்” எனக் கனிமொழி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுசெயலாளர் மல்லை சத்யா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios