பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுத்து ஒட்டு மொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் கனிமொழி. யார் விட்டாலும் தான் விடுவதாக இல்லை என்ற பாணியில், மெல்ல மெல்ல சூடு பிடித்து வந்த பொள்ளாச்சி விவாகரம் தற்போது உச்சம் தொட்டு உள்ளது. 

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து உள்ள ஒரு பெரிய கும்பலின் சதி வேலை தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும்100 பெண்களுக்கும் மேலாக இந்த காம கொடூரன்களிடம் சிக்கி உள்ளதாகவும், 1200 ஆபாச வீடியோக்களை எடுத்து உள்ளதாகவும் காவல்துறையே குற்றவாளிகளை கைது செய்த உடன் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில், தோண்ட தோண்ட கிடைக்கும் பல திடுக்கிடும் தகவலைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன் படி கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த கேவல செயலுக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
  
குற்றவாளிகளுக்கு எதிராகவும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வரும் கனிமொழி நச்சின்னு 4 கேள்வியை நாக்கு பிடிங்கி கொள்ளும் மாதிரி கேட்டு உள்ளார்.

அதன் படி, பாலியல் பலாத்கார நிகழ்வில் ஊடகங்கள் கேள்விகேட்ட பிறகே போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என்பது சட்டம்.ஆனால், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை போலீஸ் வெளியிட்டதில் உள்நோக்கம் உள்ளது என கனிமொழி குற்றச்சாட்டு வைத்து உள்ளார் 

மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது என்றும் 7 ஆண்டுகளாக ஒரு நெட்வொர்க் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது ஆனால் 4 பேர் மட்டுமே கைது என்றால் இதை நம்ப முடிகிறதா..? இதற்கு பின்னால் உள்ள மற்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என கனிமொழி களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்.  

மேலும் மற்ற அரசியல் வாதிகளை காட்டிலும், ஒரு பெண்ணாய், அரசியல் வாதியாய் கனிமொழி பல கேள்விகளை முன் வைத்துள்ளது தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.