திமுகவின் சமூக நீதி போராட்டங்கள் தொடரும் என கனிமொழி எம்.பி அவர்கள் ட்வீட்.

மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27%, EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Scroll to load tweet…

இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘PG மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புடையது. அரசியலமைப்பிற்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் நமது கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தீர்ப்பு. திமுகவின் சமூக நீதி போராட்டங்கள் தொடரும்.’ என பதிவிட்டுள்ளார்.