நேற்று முன்தினம் திமுக மாவட்டச் செய்லாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம்  அண்ணா அறிவாலயத்தில நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், எம்பியுமான திருச்சி சிவாவுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் , கோபமாகி பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

ஸ்டாலின் – திருச்சி சிவா இடையே நடைபெற்ற சூடான சில விவாதங்களினால் தான் அவரக்கு  பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கஜா புயல் பற்றி தான் பேசுவதற்காக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முன்கூட்டிய அனுமதி பெற்றிருக்கிறார் சிவா. இது தெரியாமல் கனிமொழியும் கஜா பற்றி பேச தயாராகிவிட்டார். கடைசிநேரத்தில்தா சிவா ஏற்கனவே அனுமதி கேட்டிருப்பது கனிமொழிக்குத் தெரிந்திருக்கிறது.

அப்போது, ‘நீங்க என்கிட்டையே முன்னாடியே சொல்லியிருக்கலாமே?’ என்று சிவாவிடம் கேட்டாராம் கனிமொழி. அதாவது மாநிலங்களவை திமுகவுக்கு கனிமொழிதான் தலைவர். அந்த தோரணையில் கேட்கவில்லை என்றாலும் சற்று பணிவாகத்தான் கேட்டிருக்கிறார் கனிமொழி. ஆனால் அதற்கு சிவா மிகவும் கோபமாகிவிட்டாராம்.

உங்ககிட்ட எல்லாத்தையும் கேக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. நான் உங்களை விட சீனியர்’ என்று கனிமொழியிடம் எகிறிவிட்டாராம் சிவா. இதை கனிமொழி அப்படியே விட்டுவிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மா.செ.க்கள்  கூட்டத்துக்காக அறிவாலயம் வந்த சிவாவை தன் அறைக்கு அழைத்த திமுக தலைவர் ஸ்டாலின், ‘சிவாண்ணே கொஞ்சம் கோபத்தைக் குறைச்சுக்கங்க. எல்லா இடத்துலயும் கோபத்தைக் காட்டமுடியுமா? கனி யாருனு நினைச்சீங்க. அவங்க தலைவர் பொண்ணு’ என்று லெஃப்ட் அன்ட்ரைம் வாங்கிவிட்டாராம்.

இதைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் பேச திருச்சி  சிவாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் கோபமாகி பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார் திருச்சி சிவா. சரி என்ன இருந்தாலும் ஸ்டாலினுக்கு தங்கையல்லவா கனிமொழி ?