இவர் எழுதிய காதல் பாடல்களில் காமத்துப்பால் இலை மறைக்காத காயாக துலங்கும் தலைமுறை தாண்டி பாடல் செய்தவர் நாயகன் படத்தில் எல்லா சூழல்களிலும் கொடி நாட்டினார்.

மறைந்த கவிஞர் புலமைப்பித்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பாரதிதாசன் பரம்பரையில் தொடக்கி பாடலாசிரியராக பரிணமித்தவர்களில் முக்கியமானவர் புலமைப்பித்தன். நான் யார் நான் யார் என்கிற தத்துவ கேள்வியோடு திரைப்பட வாழ்வை தொடங்கியவர். தான் யார் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவிட்டு மறைந்திருக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காதல் பாடல்களுக்காக ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்ட கவிஞராக இருந்தார், நல்லிரவு துணையிருக்க இவர் மட்டும் தனி இருக்கும் விரக நிலையில் சாட்சிக்கு ஆயிரம் நிலவுகள் அழைத்து காதலுக்குள் கவிதையை பொதித்து வைத்த இவரது பணி அடிமைப்பெண் இலிருந்து அழகு சொட்டியது.காதலின் புனிதம் என்ற ஒன்றை ஏற்றி வைக்கும் போக்கு இருந்த காலத்தில் காதலில் காமத்தை தள்ளி வைக்கக் கூடாது என்கிற தனித்துவத்தைப் பேணியவர் புலமைப்பித்தன். 

இவர் எழுதிய காதல் பாடல்களில் காமத்துப்பால் இலை மறைக்காத காயாக துலங்கும் தலைமுறை தாண்டி பாடல் செய்தவர் நாயகன் படத்தில் எல்லா சூழல்களிலும் கொடி நாட்டினார். கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை ஸ்வரஸ்தானம் என்று இசைத்தபடி இருந்தவர். எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை என்று இன்னொரு பாடலில் சொன்னார். இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.