முதலமைச்சராக  இருந்தபோது வழக்கம் போல காமராசர் தன் அம்மாவைப்  பார்க்க விருதுநகர்  வந்தார். அப்போது குற்றால சீசன் என்பதால் அப்படியே குற்றாலம் சென்றார். நன்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு அருவிக்குச் சென்றார்.அருவியில் தண்ணீர் அருமையாக விழுந்து கொண்டு இருந்தது. ஆனால், அங்கு மக்கள் கூட்டமே இல்லை.

ஆச்சரியப்பட்டுப் போன காமராஜர் இவ்வளவு செமையா சீசன் இருக்கும்போது மக்கள் கூட்டமே இல்லையே என தனக்கு பாதுகாப்புக்காக வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் என்னப்பா யாருமே இல்லை; கூட்டம் ஒன்னையும் காணோமே" என்று கேட்டிருக்கிறார்.

அப்போது அவரது பாதுகாவலர்கள்  ஐயா, விஐபிக்கள்  குளிக்கும் போது பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. இது வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து வரும் நடைமுறை ஐயா" என்று பதில் கூறியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த  காமராசர், இப்ப நடக்கிறது வெள்ளைக்காரன் ஆட்சியில்லை. ஐனநாயக மக்களாட்சி. போய்யா, போய் பொதுமக்களை சுதந்திரமாகக் குளிக்க அனுப்பி வை " என்றாராம்.

அதன்பிறகு பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு குளிக்க வந்தார்களாம்.அப்போது அவர்களுடன்  காமராஜர் எடுத்துக கொண்ட புகைப்படம்தான் இபோது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சாலை மார்க்கமாக செல்லும் போதே இந்த டிராபிக்கை 2 மணி நேரம் நிறுத்தி விடுகின்றனர். காமராஜருடன் ஒப்பிடும்போது  இன்றைய ஆட்சியாளர்கள் மக்களைப்படுத்தும் பாடு மனதில் ஒரு கணம் வந்து போகிறது.