kamalhassan congraulate to rahul gandi

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா செயல்பட்டு வந்தார். இப்போது 71 வயதாகும் சோனியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரியே தாக்கல் செய்யப்பட்டன.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். இதனை அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில் உங்கள் வீட்டு பெரியவர்களைப் பார்த்து நான் பெருமைப்பட்டுள்ளேன், நீங்களும் கடுமையான உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் உங்கள் தோள்களுக்கு கூடுதலாக பலம் சேர்ந்துள்ளது… வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.