Asianet News TamilAsianet News Tamil

கமல் கண்ணுல உண்மையில்லை: நம்பிக்கை கொடுக்காத நம்மவரின் மாற்று அரசியல்!

ரிமோட்டை வீசியெறிந்து டி.வி.யை. உடைக்கிறார்!  தி.மு.க.வை ‘குடும்ப அரசியல்’ என்று நேரடியாய் சாடுகிறார், எடப்பாடியார் - ஓ.பி.எஸ்.ஸை ‘நீட் அனிதா மரணத்திற்கு காரணமானவர்கள்’ என்கிறார், மோடியையும் ராகுலையும் மூலையோடு வைத்து சாத்துகிறார்! ஆனாலும் கமல் மீது கிஞ்சிற்றும் நம்பிக்கை வரவில்லை மக்களுக்கு!... நெத்தியடியாய் விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
 

kamalahassan eyes says not true, alternative political is unbelievable
Author
Chennai, First Published Apr 14, 2019, 1:37 PM IST

ரிமோட்டை வீசியெறிந்து டி.வி.யை. உடைக்கிறார்!  தி.மு.க.வை ‘குடும்ப அரசியல்’ என்று நேரடியாய் சாடுகிறார், எடப்பாடியார் - ஓ.பி.எஸ்.ஸை ‘நீட் அனிதா மரணத்திற்கு காரணமானவர்கள்’ என்கிறார், மோடியையும் ராகுலையும் மூலையோடு வைத்து சாத்துகிறார்! ஆனாலும் கமல் மீது கிஞ்சிற்றும் நம்பிக்கை வரவில்லை மக்களுக்கு!... நெத்தியடியாய் விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

kamalahassan eyes says not true, alternative political is unbelievable
 
கிட்டத்தட்ட இறுதி மணிநேரங்களை நெருங்கிவிட்டது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம். வீட்டு வாசலில் நின்று வாக்கு கேட்டுக் கொண்டிருந்த கட்சிகள் வரிசையாக டி.வி.க்களின் வழியே வீட்டுக்குள்ளே வர துவங்கிவிட்டன. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என அத்தனை பேரும் அதகளப்பத்துகின்றனர். அவர்களோடு மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் வந்து நிற்கிறார். 

’மாற்று அரசியல் தருகிறேன்’ என்று கட்சி துவங்கியவரின் தேர்தல் விளம்பரமும் சற்று மாற்றாகத்தான் இருக்கிறது. டி.வி.யை உடைக்கிறார், இருட்டு அறைக்குள்ளிருந்து வெளிச்சமாய் வந்து நிற்கிறார், ஸ்பாட் லைட் நகர நகர பேசுகிறார். இப்படி என்ன்னெனவோ செய்கிறார்.  கமலின் கன்னி தேர்தல் முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி? என்று விமர்சகர்களிடம் கேட்டால்....kamalahassan eyes says not true, alternative political is unbelievable

“கமல் எப்பவுமே நல்ல பர்ஃபார்மர் என்பதில் எள் முனையளவும் மக்களுக்கு  மறுப்போ, இரண்டாம் கருத்தோ இல்லை. ஆனால் கமலின் இந்த விளம்பரங்கள் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை. 

அக்மார்க் அரசியல்வாதியான ஸ்டாலின் திடீரென டி.வி. தேர்தல் விளம்பரங்களில் நடிகராகும் போது மக்கள் பரவசமாக பார்க்கிறார்கள். ஆனால் உலகதர நடிகரான கமல்ஹாசனின் டி.வி. விளம்பரங்களை மக்கள் வெகு சாதாரணமாக கடந்து போகிறார்கள். ‘நறுக்குன்னு நடிக்க அவருக்கு சொல்லியா தரணும்?’ என்று அவரை பெருமைப்படுத்தி பேசியே காலி செய்கிறார்கள். ஆக கமல்ஹாசனின் விஸ்வரூப திறமையே அவரை இந்த தளத்தில் சாய்த்திருக்கிறது. kamalahassan eyes says not true, alternative political is unbelievable

சரி, கமலின் தேர்தல் விளம்பரங்கள் அவரது அரசியல் வெற்றிக்கு கைகொடுக்குமா? என்று அலசினால், எதிர்மறை பதில்தான் வருகிறது. நிச்சயம் மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் அவரது விளம்பரங்கள் உருவாக்கவில்லை. ‘ஏதோ அவர் புதுப்படத்தோட டீசர் மாதிரிதான் பார்க்கிறோமே தவிர அதுல சினிமாத்தனம் தாண்டி எதுவுமில்லை, அவர் கண்ணில் உண்மை இல்லை.’ன்னு ஓப்பனா கருத்து வந்து விழுது. 

விளைவுகள் இப்படியிருந்தால் எப்படி தேறுவார் அரசியல் கமல்?” என்கிறார்கள். நம்மவர் தன் அரசியல் முடிவை சுயபரிசோதனை செய்தல் அவசியம்.

Follow Us:
Download App:
  • android
  • ios