உலக நாயகன் கமலஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைப்பெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தன்னுடைய கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். 

அடுத்த பொதுக்கூட்டம்:

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி திருச்சியில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று நேற்று பேட்டியில் தெரிவித்தார்.

நெடுவாசல் மக்களுடன் கமல்:

திருச்சியில் நடைப்பெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னர் நெடுவாசல் கிராம மக்களை நேரில் சந்திக்க கமல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய கிராம மக்களை கமலஹாசன் சந்தித்தால் போராட்டக்காரர்களுக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெடுவாசல் போராட்டம் என்பது மத்திய அரசுக்கு எதிரானது என்பதால் கமல் மக்களுக்காக மத்திய அரசையும் எதிர்க்க துணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.