Asianet News TamilAsianet News Tamil

"ராஜினாமா செய்யும் அளவுக்கு குற்றங்கள்...முதல்வர் பதவி விலகுவாரா?" - கமல்ஹாசன் சவால்!

kamal tweet about TN politics
kamal tweet about TN politics
Author
First Published Aug 15, 2017, 3:45 PM IST


தமிழகத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்யும் அளவுக்கு குற்றங்கள் மலிந்து கிடப்பதாகவும், பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என்றும் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், அண்மையில் அளித்த ஒரு பேட்டியின்போது தமிழகத்தல் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றும், லஞ்சம், ஊழலில் பீகாரைவிட தமிழகம் மோசமாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

கமலின் இந்த கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், உள்ளிட்டோர் நடிகர் கமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

kamal tweet about TN politics

அதே நேரத்தில், நடிகர் கமலுக்கு ஆதரவாக திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழல் குறித்து அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் இ மெயில் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கமல் கூறியிருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் செல்போன் எண்கள், இமெயில் முகவரிகள் மாயமானது. அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் செல்போன் எண்கள், இமெயில் முகவரிகள் மாயமானது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. 

விம்மாமல் பம்மாமல் ஆவண செய்... அண்மையில் என்று நடிகர் கமல் செய்த டுவிட்டால் ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குழப்பமடைந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல் ஹாசன், தற்போது தமிழக முதலமைச்சர் மீது நேரடியான விமர்சனத்தை வைத்துள்ளார். 

கமல் இன்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்யும் அளவுக்கு குற்றங்கள் மலிந்து கிடப்பதாக அதில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்? முதலமைச்சர் ராஜினாமா செய்வாரா? எனது இலக்கு சிறப்பான தமிழகம்தான். எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது?

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கேட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios