Asianet News TamilAsianet News Tamil

’தேவைப்பட்டால் விஜயகாந்துடன் கூட கூட்டணி அமைப்போம்’...இறங்கி அடிக்கும் கமல்...

சில தினங்களுக்கு முன்புவரை பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டி என்பதில் உறுதியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் கூட்டணிக்கு வலைவீசி வருகிறார். கமலின் கூட்டணி விருப்பப்பட்டியலில் கேப்டன் விஜயகாந்தும் இருப்பதை இன்று வெளிப்படையாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

kamal to join hands with vijayakanth
Author
Chennai, First Published Feb 26, 2019, 3:11 PM IST

சில தினங்களுக்கு முன்புவரை பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டி என்பதில் உறுதியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் கூட்டணிக்கு வலைவீசி வருகிறார். கமலின் கூட்டணி விருப்பப்பட்டியலில் கேப்டன் விஜயகாந்தும் இருப்பதை இன்று வெளிப்படையாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.kamal to join hands with vijayakanth

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த கமல்,’’பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி.

ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும், மனதும் உண்டு. தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம். தேவைப்பட்டால் தான் தனித்து போட்டி. அதுக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் கருத்து வேறுபாடு உடையவர்களுடன் கூட்டணி கிடையாது.தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். ரஜினி எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பாரா? அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு அளிப்பாரா? என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஆதரவு குறித்து பேசுவோம்.kamal to join hands with vijayakanthபாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 28-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை விருப்ப மனு படிவம் வழங்கப்படும். இதில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மட்டும் இல்லாது உறுப்பினர் அல்லாதவர்கள், சிறந்த எம்.பி. ஆக வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுவை ரூ.10 ஆயிரம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

அரசியலில் விமர்சனம் இயல்பு. கூட்டணி வைப்பது இயல்பு. ஆனால் கருத்து ஒத்துப்போவது என்பது மிக முக்கியம். ‘பி டீம்’ என்பதற்கு சரியான பதிலடியாக மீண்டும் கெட்ட வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். செயலின் மூலம் பதிலடி இருக்கும். அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பணத்திற்காகத்தான் என்று எழும் விமர்சனத்திற்கு மக்களின் எண்ணம் எதுவோ அதுவே எனது எண்ணம்' என்றார் கமல்.

Follow Us:
Download App:
  • android
  • ios