Kamal speaks Ungrateful - Chief Edappadi palanicami retaliation

விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி செய்தவர் ஜெயலலிதா எனவும், ஆனால் நன்றி மறந்து பேசுகிறார் கமலஹாசன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மக்கள் விரும்பாத நிலையில் சட்டம் இடமளிக்கிறது என்பதற்காக மேலும் 4 ஆண்டுகளுக்கு அதிமுக அரசு தொடர வேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நடிகர் கமஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

எந்த கிராமத்திற்காவது நடிகர் கமலஹாசன் நேரில் சென்று பார்த்தது உண்டா?

65 வயதிற்கு மேல்தான் கமலஹாசனுக்கு ஞானோதயம் வந்துள்ளது.

விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி செய்தவர் ஜெயலலிதா.

ஆனால் நன்றி மறந்து பேசுகிறார் கமலஹாசன்.

தற்போது உள்ள ஆட்சி தொடரக்கூடாது என கமலஹாசன் கூறுகிறார். ஏன் தொடரக்கூடாது?

குற்றசாட்டுகள் கூறுபவர்கள் ஆட்சியில் என்ன குறை கண்டிருக்கிறார்கள்?

இவ்வாறு அவர் பேசினார்.