அரசியலுக்கு வந்த பின் கமல்ஹாசனின் இமேஜை இஷ்டத்துக்கும் இடைச்சு தூள் தூளாக்கும் விமர்சனங்கள் எவ்வளவோ வந்துவிட்டன. ஆனால் லேட்டஸ்டாக ஒன்று சுற்றி வருகிறது, அது உச்சபட்சமான தாக்குதல். அது....’பேசுறது பகுத்தறிவு, ஆனால் பூசுறது விபூதி!’ என்பதுதான்.  ஏன்?.....

கமல்ஹாசன் தன்னை காந்தியின் பேரனாகவும், பெரியாரின் பெறாத பிள்ளையாகவும் சித்தரித்துக் கொண்டு மிகப்பெரிதாக அன்பு மற்றும் பகுத்தறிவு சித்தாந்தங்களை அள்ளி வீசுவார். தன் அரசியலில் திராவிடம் இருந்தாலும் கூட அது ‘மக்களை ஏமாற்றும் வெற்று திராவிடம் கிடையாது.’ என்றெல்லாம் மேக் அப் பண்ணுவார். ஆனால் அவை அத்தனையும் வெற்று ஸீன்கள்! என்று போட்டுப் பொளப்பார்கள் விமர்சகர்கள். 


அந்த வகையில் இப்போதும் ஒரு விமர்சனத்தை அவர் மீது வைக்கின்றனர், அது....பகுத்தறிவு கமல்ஹாசன் அப்பல்லோவில் படுத்த பின் ஆன்மிக பிரியர் ஆகிவிட்டார்! என்பதுதான். இந்த விமர்சனத்துக்கு ஆதாரமாக ஒரு போட்டோவையும் காட்டுகின்றனர். அது, காலில் சிறு அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்த கமல், அச்சிகிச்சை முடித்து எழுந்த பின், தன் குடும்பத்து பெண்ணினால் எடுக்கப்படும் ஆரத்தி தட்டின் முன் பவ்யமாக நின்ற செயலைத்தான்!


இது பற்றி பேசும் விமர்சகர்கள்   “கடவுள் இல்லை, இல்லவே இல்லை! சென்டிமெண்ட்கள் வேண்டாம்! என்று தன் கட்சியினருக்கும், தன்னுடன் சினிமா தொழிலில் ஈடுபடுவோருக்கும் சொல்லிக் கொண்டே இருப்பார். தசாவதாரம் படத்தில் கூட ‘நான் கடவுள் இல்லைன்னு சொல்லலைங்க. இருந்தா நல்லா இருக்குமுன்னுதான் சொல்றேன்!’ என்று பகுத்தறிவு டயலாக்கை  மறைமுகமாக வைத்திருப்பார்.  இப்படி ஊருக்கு உபதேசம் பண்ணும் கமல், ஊருக்கு தான் சொல்லும் உபதேத்தை, தானே கடைப்பிடிக்காமல் இப்படி ஆரத்தி தட்டு முன் கைகட்டி நிற்பது, சித்தாந்தத்தை காலில் போட்டு மிதித்த செயல். ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும்? ஊருக்கு ஒரு வேஷம், உள்ளுக்குள் வேறு வேஷம் ஏன்? இந்த விஷயத்தில் அவர் அப்படியே கருணாநிதியின் ஜெராக்ஸ்.” என்கிறார்கள். நம்மவரே இது நியாயமா?